Connect with us

வெற்றி பெற்றதும் போதும் …ரொம்ப ஓவராத்தான் போறாங்க … கடுப்பில் இந்திய ரசிகர்கள்

விளையாட்டு

வெற்றி பெற்றதும் போதும் …ரொம்ப ஓவராத்தான் போறாங்க … கடுப்பில் இந்திய ரசிகர்கள்

உலகக்கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது முதல் இப்போது வரை சர்ச்சைகள் கிளம்பிய வண்ணமே உள்ளன. வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் ஒன்றினை பதிவு செய்தார். அந்த டிவீட்டில் இங்கிலாந்து அணியை வாழ்த்தி இருந்தார்.

அதற்கு பதிலளித்த இந்திய ரசிகர், “போட்டியை இங்கிலாந்து அணி வீரர்கள் வெல்லவில்லை. அம்பயர் மற்றும் ஐசிசி விதியே இங்கிலாந்துக்கு வெற்றியை பெற்றுத் தந்தது” என்று பதிவிட்டிருந்தார். 

இதனை கண்ட வாகன், முட்டாள்… நீங்க உங்க வாயை மூடுங்க என்று இந்திய ரசிகர்கருக்கு கடுமையாக பதிலளித்துள்ளார்.

வெற்றி பெற்றதும் போதும் …ரொம்ப ஓவராத்தான் போறாங்க … கடுப்பில் இந்திய ரசிகர்கள்


மற்றொரு புறம், 1.2 பில்லியன் மக்கள்தொகை உடைய இந்திய நாடு தோற்று போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது? என 2016ம் ஆண்டு மோர்கன் பதிவிட்டிருந்தார்.

அப்போது இந்திய அணியின் முன்னாள் வீர்ர் சேவாக், “கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது அவமானம் இல்லையா” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

உலக கோப்பையில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சேவாக்கின் இந்த பழைய ட்வீட்டை தேடி கண்டு பிடித்து ஹாய் நண்பா என்று தமது டுவீட்டை தொடங்கி இருக்கிறார். அதற்கு இந்திய ரசிகர்கள் இங்கிலாந்து பெற்றது ஒரு வெற்றியே அல்ல என்று ட்விட்டரில் கலாய்த்து தள்ளுகின்றனர். 

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top