Connect with us

சீன எல்லையில் மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட மூவர் உயிரிழப்பு

செய்திகள்

சீன எல்லையில் மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட மூவர் உயிரிழப்பு

இந்திய-சீன எல்லையில் கடந்த சில நாட்களாக போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் குவிக்கப்பட்டு வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் நேற்று சீன எல்லையில் இருநாட்டு ராணுவத்தினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், இந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் 2 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது

லடாக் எல்லையில் நேற்று இரவு சீன துருப்புகளுடன் மோதல் ஏற்பட்டதாகவும், இந்த கடும் மோதலில் இந்திய தரப்பில் மூவர் உயிரிழந்ததாகவும், சீன தரப்பில் உயிரிழப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது

இதனிடையே இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top