இந்தியன் 2 வருகிறதா இல்லையா

கமல் நடிப்பில் கடந்த 96ம் ஆண்டு வெளிவந்த படம் இந்தியன். தமிழில் சக்கை போடு போட்டது இந்த படம். லஞ்சம் வாங்குபவர்களை கொல்லும் ஒரு முதியவர் வேடத்தில் கமல் நடித்திருந்தார்.

இப்படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 எடுக்கப்படும் என அறிவித்து லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த டிசம்பரில் பூஜை போடப்பட்டது. காஜல் அகர்வால் உடன் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைப்பதாக இருந்தது.

திடீரென லைகா நிறுவனம் இந்த படத்தை ஆர்வம் காட்டாமல் பின் வாங்கியதாக சொல்லப்படுகிறது. படத்தின் பட்ஜெட், படத்தின் கதை திருப்தி இல்லாமை போன்ற காரணங்களாக இருக்குமோ என சினிமா ஆர்வலர்களால் பேசப்படுகிறது.

கமலஹாசனும் அரசியல் தேர்தல் என பிஸியாகிவிட்டார்.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடனும், சன் பிக்சர்ஸ் உடனும் ரகசியமாக இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.