’இந்தியன் 2 ’படம் டிராப்பா? அதிர்ச்சி தகவல்


be46dde1ed76df7eb038669faae3fde8-1

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2 ’திரைப்படம் கிட்டத்தட்ட ட்ராப் ஆகி விட்டதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த படத்திற்கு முன்பே லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ’சபாஷ் நாயுடு’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வந்தார். இந்த படம் டிராப் ஆகி விட்டதால் இந்த படத்திற்கு பதிலாக ’தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தை உருவாக்கி தருவதாக கமல் வாக்களித்திருந்தார்

ஆனால் தற்போது ’தலைவன் இருக்கின்றான்’ படமும் டிராப் ஆகி விட்டதால் கமல்ஹாசன் தரவேண்டிய பணத்தை ’இந்தியன் 2’ சம்பளத்தில் கழித்து கொள்ள லைக்கா நிறுவனம் முடிவு செய்தது

ஆனால் இதற்கு கமல்ஹாசன் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் லைக்கா நிறுவனம் ’இந்தியன் 2 ’படத்தையே டிராப் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews