Connect with us

வெறித்தனமாக ஆடிய வங்கதேச வீரர்கள்… தொடரைக் கைப்பற்றிய இந்தியா!!

விளையாட்டு

வெறித்தனமாக ஆடிய வங்கதேச வீரர்கள்… தொடரைக் கைப்பற்றிய இந்தியா!!

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடந்த மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால்,  இரண்டு அணிகளும் வெற்றிபெற வேண்டும் என்று மும்முரமாக இருந்தனர்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி, துவக்கம் இந்திய அணிக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்திய அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை.

வெறித்தனமாக ஆடிய வங்கதேச வீரர்கள்… தொடரைக் கைப்பற்றிய இந்தியா!!

அதன்பின்னர் ஓரளவு சுதாரித்து ராகுல் ஆடி 52 ரன்கள் எடுத்தார், ஸ்ரேயாஸ் 62 ரன்களும் எடுக்க இந்திய அணி வெற்றிப் பாதையினை நோக்கி பயணித்தது.

இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. அடுத்து வங்கதேச அணி 175 ரன்கள் என்ற கடின இலக்கோடு களம் இறங்கியது.

துவக்க வீரர்களாக லிடன் தாஸ் மற்றும் சவுமியா சர்கார் களமிறங்கினர், 2 வது லீக் ஆட்டம் போல் டஃப் காம்பிட்டிஷன் கொடுப்பார்கல் என்று எதிர்பார்த்திருக்க, லிடன் தாஸ் 9 ரன்களில் அவு ஆனார்.

அடுத்து சவுமியா சர்கார் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் மிதுன், நையிம் அதிரடியாக ஆடினர்..

     முஸ்பிகுர் ரன் எதுவும் எடுக்காமலும், முகமது மிதுன் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். நையிம் சதம் அடிப்பார் என்று நினைக்கையில், 81 ரன்களில் அவுட் ஆனார்.

அடுத்து அபிப்  துபே ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். அடுத்து வங்கதேச அணி, 19.2 ஓவரில் 144 ரன்கள் மட்டும் எடுத்தது 30 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி தோல்வியுற்றது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top