Connect with us

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி வாகை சூட காத்திருக்கும் இந்தியா

விளையாட்டு

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வெற்றி வாகை சூட காத்திருக்கும் இந்தியா

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

தற்போது 2-வது ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அதாவது இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.


 மிகச் சிறப்பாக ஆடிய விராட் கோலி அணியினை வெற்றிப்பாதையினை நோக்கி செல்ல உதவினார். ரிஷாப் பண்டின் பேட்டிங் நேற்றைய ஆட்டம் வரை சொதப்பலாகவே உள்ளது.

4 ரன்னில் கேட்ச் ஆகி ஷாக் கொடுத்தார். இவர் எழுச்சி பெற்றால், அணியின் வெற்றிக்கு கூடுதல் உதவியாக இருக்கும். இருப்பினும் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாகப் போராடும்.

தென்ஆப்பிரிக்க அணியினைப் பொறுத்தவரை மொகாலியில் நடைபெற்ற ஆட்டத்தில் அதிகபட்சமாக குயின்டான் டி காக் 52 ரன்களும், டெம்பா பவுமா 49 ரன்களும் எடுத்தனர்.

வான்டெர் துஸ்சென் 1 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி தோல்வி கொடுக்க, டேவிட் மில்லர் 18 ரன்னில் அவுட் ஆகிப் போனார். இந்த ஆட்டத்தில் வெற்றி வாகை சூட வேண்டிய நெருக்கடியில் உள்ளது தென்னாப்ரிக்கா.


Continue Reading

அதிகம் படித்தவை

To Top