Connect with us

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்

விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளும் ரத்து: அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெறவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியும், மார்ச் 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவிருந்த மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடத்த திட்டமிட்டது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப் பட்டது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது என்பது குறிப்பிடதக்கது

முன்னதாக இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போட்டியே ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top