Connect with us

இந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

விளையாட்டு

இந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

இந்தியா vs நியூசிலாந்து அணிக்கு இடையேயான 2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் ஜூன் 13 ம் தேதி இன்று மாலை 3.00 மணி அளவில் இந்திய நேரப்படி நாட்டிங்காமில் நடைபெற உள்ளது.

இந்தியா அணி விவரம்:

விராத் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், விஜய் ஷங்கர், தோனி,
கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், யூசுவெந்திர சஹால்

நியூசிலாந்து அணி விவரம்:

இந்தியா vs நியூசிலாந்து ஆட்டத்திற்கான டிரீம் 11 ஆட்டக் கணிப்பு

மார்டின் குப்தில், கொலின் முர்ரோ, கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், டாம் லதாம், ஜேம்ஸ் நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ்சோதி, டிம் சௌதி, ட்ரென்ட் பவுல்ட், லாக்ஸி பெர்குசன், மாட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், டாம் பிளண்டெல்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 18 வது ஆட்டத்திற்கான ஆட்டக் கணிப்பு:

இதுவரை நடந்த ஆட்டங்களில் இந்தியா மற்றும் நியூசிலாந்து எதிர் எதிராக  7 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோதியுள்ளன. அதில் இந்தியா 3 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 4 முறை வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து எதிர் எதிராக 106 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. அதில் இந்தியா 55 முறை வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து 45 முறை வெற்றி பெற்றுள்ளது. 6 முறை ட்ராவில் முடிந்தது.

இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி மூன்றாவதாக, நியூசிலாந்தை பதம் பார்க்க உள்ளது.

நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேசத்தையும், 3வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் தோற்கடித்து முதலிடம் வகிக்கிறது.

தவான் பங்கு பெறாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் என்றாலும், மிகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இந்திய அணி ஆடி நியூசிலாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளது. இதுவரை தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் தங்களின் வெற்றிப்பயணத்தை தொடரவேண்டும் என்ற வெறியோடு ஆடும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.
 
எதிர்பார்க்கக் கூடிய 11 வீரர்கள்:

இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ அல்லது ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இது இன்று நடக்கவிருக்கிற ஆட்டத்திற்கான சிறு கணிப்பு மட்டுமேதான். ஏதேனும் மாறுதல் இருப்பின் வலைதளம் பொறுப்பாகாது.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

பொழுதுபோக்கு

பீட்சாவுக்கு 7 வயது

To Top