Connect with us

இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போராடும் இந்தியா-நியூசிலாந்து அணிகள்

விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போராடும் இந்தியா-நியூசிலாந்து அணிகள்

மான்செஸ்டர்:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கடந்த சனிக்கிழமையுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

புள்ளிப் பட்டியல்:

லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

இறுதிப்போட்டிக்கு முன்னேறப் போராடும் இந்தியா-நியூசிலாந்து அணிகள்

இந்தியா-நியூசிலாந்து மோதல்:

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் முதல் அரைஇறுதி ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடக்கிறது. இதில் இந்திய அணி, நியூசிலாந்து அணியை சந்திக்கிறது.

இந்திய அணி லீக் முடிவில் 7 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 5 சதம் உள்பட 647 ரன்கள் எடுத்து ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் விராட்கோலி (442 ரன்கள்), தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் (360 ரன்கள்) ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் பும்ரா (17 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (11 விக்கெட்), குல்தீப் யாதவ் (6 விக்கெட்) ஆகியோர் எதிரணிக்கு சவாலாக இருந்து வருகிறார்கள்.

நியூசிலாந்து அணி லீக்கில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் 11 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்தது. தொடக்கத்தில் தோல்வியை சந்திக்காமல் இருந்த நியூசிலாந்து அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

கேப்டன் கேன் வில்லியம்சன் (2 சதம் உள்பட 481 ரன்கள்) பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இது தவிர ராஸ் டெய்லர்,  மார்ட்டின் கப்தில், டாம் லாதம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். ஆல்-ரவுண்டரில் ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம் சிறப்பாக ஆடி வருகிறார்கள். பந்து வீச்சில் பெர்குசன், டிரென்ட் பவுல்ட், மேட் ஹென்றி ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.

இரண்டு அணிகளும் வெற்றி வாய்ப்பினைப் பெறப் போராடும் என்பதில் சந்தேகமில்லை.

அணி வீரர்களின் உத்தேச பட்டியல்:

இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, டோனி, கேதர் ஜாதவ், முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், பெர்குசன், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top