வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் நேற்று நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ஜான் கேம்ப்பெல் (0) கேட்ச் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான இவின் லீவிசை (0) புவனேஷ்வர்குமார் வெளியேறினார்.

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

நிகோலஸ் பூரன் 20 ரன்னிலும், ஹெட்மயர் ரன் எதுவும் எடுக்காமலும் வீழ்ந்தனர். பொல்லார்ட் 49 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 95 ரன்களுக்கு முடக்கப்பட்டது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இந்திய தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணியால் சிறிய இலக்கை கூட சுலபமாக நெருங்க முடியவில்லை. இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துணை கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களும், கேப்டன் விராட் கோலி, மனிஷ் பாண்டே தலா 19 ரன்களும் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டியும் இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.