இந்த கஷாயத்தோடு மழைக்காலத்தை வரவேற்போம்!- பாரம்பரிய மருத்துவம்

90bf7abd672fa84c0168b98124c4bb3b-2

மழைக்காலம் வந்தாலே ஜதோஷத்தோடு ஜுரம், மூக்கடைப்பு, தலைவலி, என வரிசைக்கட்டி வரும். வருமுன் காக்கவும், வந்த பிறகு சரிசெய்யவும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு இந்த அத்தனை சிரமங்களையும் நம் முன்னோர்கள் சமாளித்து வந்தனர். இனி மழைக்காலத்தில் வரும் சின்ன சின்ன உடல் உபாதைகளை போக்கும் வழிகளை பார்ப்போம்.

இன்று துளசி=சித்திரத்தை கஷாயம் செய்வது எப்படி என பார்க்கலாம்..

6f8cb410cf65ade22a4fd0c6f49a28af

தேவையான பொருட்கள்:

மிளகு – 10,

இஞ்சி (அலசி, தோல் சீவியது) – சிறிதளவு,

பனங்கல்கண்டு – ஒரு டேபிள்ஸ்பூன்,

சித்தரத்தை – சிறிதளவு,

துளசி (அலசி ஆய்ந்தது) – 2 கைப்பிடி அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அடிகனமான பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்கவிடவும், ஒரு டம்ளர் நீராக சுண்ட வேண்டும், வடிகட்டி இளம் சூடாக பருகலாம்.
இந்தக் கஷாயத்தினை காலை மாலை அருந்திவர மழை, குளிர் காலத்தில் ஏற்படும் பல்வேறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.