சுதந்திர தினவிழா – 2019

சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளனர். சுதந்திர தினத்திற்கான ஒத்திகை இராஜாஜி அரங்கில் நடை பெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்த உள்ளார். பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தினத்தை கொண்டாடபட உள்ளது. இந்நிலையில் இவ்விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

சுதந்திர தினவிழா - 2019  ஆம் ஆண்டுக்கான முன்னேற்பாடுகள்

சுதந்திர தின விழா பாதுகாப்பில் மத்திய அரசு தங்களின் முழூ கவனத்தையும் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் டெல்லி செங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்கள் அரசு சார்பில் சுதந்திர தின விழா நடை பெற உள்ள இடங்களில் போலீஸ் பாதுகாப்புகாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 7-அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ஏற்பாடுகள் வரும் 22-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது.