டிக் டாக் செயலி தொடர்பாக நடந்த சம்பவங்கள்!!

டிக் டாக் செயலி தொடர்பாக நடந்த சம்பவங்கள்!!

டிக் டாக் செயலியானது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

இது வெகு விரைவில் அனைவர் மத்தியிலும் பிரபலமானது, ஆனால் இதில் சில முகம் சுளிக்கவைக்கும் விஷயங்களும் இருந்ததால் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மனதினை கெடுக்கும்வகையாக இருந்தது.

டிக் டாக் வீடியோக்களை தடைசெய்யக் கோரி, மதுரையைச் சார்ந்த வழக்கறிஞர் முத்துக் குமார் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

டிக் டாக் செயலி தொடர்பாக நடந்த சம்பவங்கள்!!

இந்தோனேஷியா மற்றும் அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் கோர்ட்டும் டிக் டாக் செயலியை டவுன்லோடு செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.

ஆனால் டிக் டாக் சார்பில் நாங்கள் இனி ஆபாச வீடியோக்கள் பதிவேற்றுவதை தடை செய்கிறோம், ஏற்கனவே இதுகுறித்த பல லட்சக் கணக்கிலான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இனி தீவிரமாக கண்காணிப்போம் என்று கூறப்பட்டது.

இதன்படி 18 வயதுக்கு உட்பட்டோர் டிக் டாக் வீடியோவினை பயன்படுத்தக்கூடாது என்றும், ஆபாச வீடியோக்களை அனுமதிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் வழக்கினைத் தள்ளுபடி செய்தது.