இளையராஜாவுக்கு விவேக்கின் வேண்டுகோள்

இசைஞானி இளையராஜாவுக்கு வரும் பிப்ரவரி 2ல் மிகப்பெரும் பாராட்டு விழாவை தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை, ப்ரமோக்கள் ஆகியவை களை கட்டி வருகிறது.

நடிகர் விவேக் இசைஞானி இளையராஜாவின் மிக தீவிர ரசிகர் ஆவார். அவரது மேல் உள்ள அபிமானத்தால் அவரது இசை நிகழ்ச்சிகள் பலவற்றை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

தனது குழந்தைகளுக்கு இசைஞானி தான் பெயர் சூட்ட வேண்டும் என்று தனது குழந்தைகளுக்கு இளையராஜாவை பெயர் சூட்ட வைத்தார்.

இன்று விவேக் வெளியிட்டுள்ள டுவிட்டில் ஒரு பாடலை விவேக் வாசித்து காட்டுகிறார் அது பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ஆனந்த ராகம் பாடல் அதை அவர் பாட வேண்டும் என்ற நோக்கில் வாசித்து காட்டியுள்ளார்.

என் நேயர் விருப்பம் என விவேக் தெரிவித்துள்ளார். இதை விஷால் லைக் செய்துள்ளார்.