இளையராஜா பாட ரஹ்மான் இசையமைக்க- களைகட்டிய இளையராஜா75

இளையராஜாவை கெளரவிக்கும் வகையில் பிப்ரவரி2, 3 இரண்டு தேதிகளில் சென்னை நந்தனத்தில் இளையராஜா 75 என்ற மாபெரும் நிகழ்ச்சியை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன் படி நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டார். ரஹ்மான் , ராஜாவிடம் மூடுபனி தொடங்கி பல்வேறு படங்களில் கீ போர்டு ப்ளேயராக பணியாற்றியவர்.

புன்னகை மன்னன் படத்தில் வரும் தீம் மியூசிக் உட்பட சில விசேசஷமான ராஜாவின் இசையமைப்புகளில் ரஹ்மானும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.

நேற்று நடந்த விழாவில் குரு, சிஷ்யர்கள் போல அந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ராஜாவிடம் ஒரு படத்தில் பணிபுரிந்தாலும் அது 500 படங்களில் பணிபுரிந்ததற்கு சமம் என ரஹ்மான் கூறினார். தான் முதன் முதலில் மூன்றாம் பிறை படத்தில்தான் ராஜா சாருடன் பணியாற்றியதாக ரஹ்மான் கூறினார்.

மேலும் மன்றம் வந்த தென்றலுக்கு பாடலை ரஹ்மான் வாசிக்க ராஜா பாடினார்.

இளையராஜா, ரஹ்மான் இணைந்து பேசியது பாடியது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ள செய்தது.