Connect with us

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் சென்னை திரும்பினார்

விளையாட்டு

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் சென்னை திரும்பினார்

பிரேசிலில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றது, இதில்பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

போட்டி முடிந்து வெற்றியுடன் திரும்பிய  இளவேனிலுக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இளவேனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தங்கப்பதக்கம் வென்றது எனக்கு வரம் போன்றது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இனி வரும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு முன்னோடியாக இருப்பேன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் தற்போது இருப்பதால், அவர் தமிழகம் வந்ததும் அவரை சந்தித்து பாராட்டுகளைப் பெறுவேன். இதுவே என் வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாகும்” என்றார்.


இந்த ஆட்டத்தின்மூலம் பெண்களுக்கான ஏர் ரைபிள் பட்டியலில் இளவேனில் 16-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். தற்போது இளவேனில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இவரது வெற்றியினைக் கொண்டாடி வருகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top