இட்லிக்கு பொருத்தமான காரசாரமான வெங்காய சட்னி..


c3c4c3a2902c13d049c2f3c25194fed7

இட்லிக்கு சட்னி என்பது எழுதப்படாத விதி. தேங்காய் சட்னி, புதினா சட்னி, கறிவேப்பிலை சட்னி என்றால் பிள்ளைகள் தெறிச்சு ஓடும்.தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி என்றால் எக்ஸ்ட்ராவாய் ஒரு இட்லி உள்ளிறங்கும்.

காரசாரமாய் வெங்காய சட்னி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 3 (நறுக்கியது)

வரமிளகாய் – 7-8

உளுத்தம்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்

புளி சிறிது,

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு,வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் உப்பு, புளி சேர்த்து லேசாய் வதக்கி, அடுப்பை அணைத்துவிட்டு, இவை ஆறியதும் கொரகொரப்பாய் அரைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பரிமாறவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews