நான் குடிப்பது இல்லை- கஸ்தூரி விளக்கம்

நடிகை கஸ்தூரியின் டுவிட்டர் பக்கம் புகழ்பெற்றது அவ்வப்போது ஏதாவது சுவாரஸ்யமான விவாதம், கடும் வார்த்தை போர்கள், அனல் பறக்கும் விவாதம் முதலியவை இவரது டுவிட்டர் பக்கங்களில் நடக்கும்.

இந்நிலையில் அவரின் பாலோயர் ஒருவர் கஸ்தூரியிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் உண்டா என கேள்வி கேட்டுள்ளார் அதற்கு கஸ்தூரி அளித்துள்ள பதில்,

நான் குடிப்பதில்லை. மது என்ன, காபி, டீ, குளிர்பானங்கள், பால் எதுவும் அருந்தும் பழக்கம் கிடையாது. எப்போதுமே வெந்நீர், மோர், பழரசம் மட்டுமே .