லக்ஸரி பட்ஜெட் பொருட்கள் எனக்க வேண்டாம்- சேரன் வருத்தம்..

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. எலிமினேஷன் ஒருபுறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்ஸூரி பட்ஜெட் டாஸ்க் நேற்றும் வழங்கப்பட்டது.

அதன்படி, பிக்பாஸ் வீட்டில் கொடூர கொலையாளிகள் நுழைந்து ஒவ்வொரு ஹவுஸ்மேட்சையும் கொல்வார்கள் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் வழங்கினார். 

லக்ஸரி பட்ஜெட் பொருட்கள் எனக்க வேண்டாம்- சேரன் வருத்தம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் கொலையாளி டாஸ்க் நடந்து முடிந்தது. முதலில் இந்த டாஸ் ஆரம்பித்தவுடன் கவின் மற்றும் மீராவை இந்த கொலையாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ்காரர்களாக செயல்பட்டனர். ஆனால் அவர்களால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. 

கடைசியாக வனிதா மற்றும் முகின் இணைந்து தந்திரமாக கவினையும் கொலை செய்துவிட்டனர். டாஸ்க்கிற்காக மயானத்தில் இருந்த சாக்ஷி, ஷெரின், மோகன் வைத்யா புலம்பிக் கொண்டிருந்தனர், இதனால் கவின் அவர்களுக்காக வருத்தப்பட, அது இறுதியில் சண்டையில் முடிந்தது.

அந்த டாஸ்க் பற்றி தனக்கு எதுவும் புரியவில்லை, இதனால் பெரும்பாலோனோர் கஷ்டப்படுகின்றனர். இதனால் கேமிரா முன்பு சென்று தனக்கு டாஸ்க்கில் கிடைக்கும் லக்ஸ்ரி பட்ஜெட் வேண்டாம் என்று கூறிவிட்டார்.