கவின் எனக்கு வேண்டாம் – ப்ரேக் அப் செய்த பிக் பாஸ் சாக்ஷி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்தித்தார்.

லோஸ்லியா மற்றும் சாக்‌ஷி என்று இருவரையும் காதலித்துக் கொண்டிருக்கும் கவினுக்கு காதல் என்றால் என்ன? என்பதை பிக் பாஸ் கமல் ஹாசன் புரிய வைத்துள்ளார்.

கவின் எனக்கு வேண்டாம் – ப்ரேக் அப் செய்த பிக் பாஸ் சாக்ஷி!

இரண்டு வாரங்களுக்கு முன் கவினும் சாக்ஷியும் காதல் கொண்டனர், இதனை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டனர், இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து காதலித்து வந்த நிலையில், மறுபுறம் லோஸ்லியாவையும் காதலித்து வந்துள்ளார்

ஒரு கட்டத்தில் பொறாமையால் சாக்‌ஷி மற்றும் கவின் இடையில் ஏதோ பிரச்சனை உண்டானது. இதனால், அடிக்கடி சாக்‌ஷியை கவின் காயப்படுத்தி வந்துள்ளார். அவரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, லோஸ்லியாவுடன் ஜாலியாக இருந்தார்.

இந்த நிலையில், நைனாவை அழ வைக்கிறது பிடிக்காது என்றால், அப்புறம் மைனாவை மட்டும் ஏன் அழ வைக்கிறீர்கள் என்று கவினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். 

இன்னமும், கவின் விளையாட்டு பிள்ளையாகவே இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த கவின் சாக்‌ஷியை அதிகளவில் காயப்படுத்தியதற்காக சாக்லெட் கொடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இதே போன்று மற்றொரு சாக்லெட் கொடுத்து லோஸ்லியாவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது பிறந்தநாளை கொண்டாடிய சாக்‌ஷி “ஒரு காதலியின் வலியைக் கூட தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் காதலிக்கும் அப்படியொரு காதலன் தேவையில்லை: என்று தூக்கியெறிந்துள்ளார் சாக்‌ஷி.