Connect with us

நான் சந்திரமுகி 2 வில் நடிக்கல… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!!

பொழுதுபோக்கு

நான் சந்திரமுகி 2 வில் நடிக்கல… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்ரன்!!

ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு என பல முன்னணி நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து மிகவும் பிரபலமான படம் சந்திரமுகி திரைப்படமாகும். 2005 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 200 நாட்களுக்கும் மேல் திரையரங்கில் ஓடி வசூல் வேட்டை நடத்தியது.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆன போதிலும் இப்படம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும்போது அதற்கு கிடைக்கும் டிஆர்பி வேறு லெவலாக உள்ளது.

இந்தநிலையில் இயக்குனர் பி.வாசு இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முடிவினை எடுத்துள்ளார்.   இந்தநிலையில் சந்திரமுகி -2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் சிம்ரன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது. 

இந்த நிலையில் சமீபத்தைய பேட்டி ஒன்றில் சிம்ரன் சந்திரமுகியில் தான் நடிக்கவில்லை என்று கூறி வெளியான விஷயங்கள் வதந்தியே என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “சந்திரமுகி 2 படத்தில் நான் நடிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. உண்மையில் அது பொய்யான தகவலாகும், சந்திரமுகி 2 படக் குழுவினர் யாரும் படத்தில் நடிக்கக்கோரி தன்னிடம் அணுகவில்லை.

ஒருவேளை என்னை அணுகினால் நான் நிச்சயம் இதுகுறித்த அறிவிப்பினை மகிழ்ச்சியோடு அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் அப்போ அந்த ரோலில் யாரைத்தான் ஒப்பந்தம் செய்வார்களுன்னு ஒரே குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

Continue Reading
To Top