Connect with us

மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ்: மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

செய்திகள்

மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ்: மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இபாஸ் இல்லாமல் யாரும் வெளியே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை போலீசார் தாக்கியதாகவும், அந்த மின்வாரிய ஊழியர் தனது அடையாள அட்டையை காண்பித்த பிறகும் போலீசார் தாக்கியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது

இந்த நிலையில் இதுகுறித்து மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி “சென்னை ஆவடியில் இ பாஸ் இல்லாமல் சென்ற மின்வாரிய ஊழியரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றும், மின்வாரிய பணியாளர் அடையாள அட்டை காண்பித்தும் அவரிடம் காவல் துறையினர் எப்படி இ – பாஸ் கேட்கலாம்? என்றும் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 4 வாரத்தில் அறிக்கை வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இ – பாஸ் விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு தகுந்த அறிவுறுத்தல் வழங்க டிஜிபி-க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னணி நாளிதழ் ஒன்றின் நாளிதழ் செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Continue Reading
To Top