மதராஸிலிருந்து சென்னை – சென்னையிலிருந்து தமிழ்நாடு உருவானது எப்படி?

தமிழகம் முழுவதும் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்த வண்ணமே உள்ளன. செய்திகளிலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி இந்த பிறந்தநாள் பற்றிய பேச்சுதான் உள்ளது. அதிக அளவில் வாழ்த்துகளைப் பெற்ற பிறந்தநாளாக இந்தப் பிறந்தநாள் தான் உள்ளது. இவ்ளோ பேமஸா பிறந்தநாள் கொண்டாடுவது யார்? யாருமல்ல நம்ம தமிழகத்தின் தலைநகரம் சென்னையின் பிறந்தநாள் இன்று.

  1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி ஒரு நிலப்பகுதியை பிரான்சிஸ் டே விலைக்கு வாங்கினார். அது வேறு எந்த இடமும் அல்ல சென்னைதான். அன்றைய நாள்தான் சென்னை பிறந்த நாளாக கருதப்படுகிறது.

c53977880f63486ee991949cd25efe8d

இந்தப் பிறந்தநாளுக்குத்தான் சமூக வலைதளங்களில் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததுடன் கொண்டாடி வருகின்றனர். சென்னை உருவான கதை இதுதான். சென்னை எப்போது சென்னை எனப் பெயர் பெற்றது? அந்தக் கதையைப் பார்க்கலாம் வாங்க.

பிரான்சிஸ் டே வாங்கிய இடத்தில் ஆங்கிலேயர் காலத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளே மதராசப்பட்டணம் ஆகும். 

சிறு கிராமம் போல் இருந்த இப்பகுதி மிகப் பெரிய ஊராக காலப் போக்கில் மாற, இதனை இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்க திட்டமிட்டு ஒரு பகுதியை மதராசப்பட்டணம் என்றும், மற்றொரு பகுதியை சென்னப்பட்டணம் என்றும் பிரித்தனர். இந்த இரு பகுதிகளே ஆங்கிலேயர்களால் மதராஸ் மாகாணம் எனப் பெயர் பெற்றது.

இந்த சென்னை மாகாணமானது தமிழ்ப் பற்றுக்கொண்ட பல தலைவர்களின் பல போராட்டங்களுக்குப் பின் ஐய்யா சங்கரலிங்கனார் அவர்களின் பெரும் முயற்சியினால் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நம்ம சென்னை மாகாணத்தின் பின்னணியில் வரலாற்றுச் சிறப்புமிக்க இதுபோன்ற பல கதைகள் உள்ளன. D7

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.