நெஞ்செரிச்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?

நம்மில் பல பேருக்கு அவ்வப்போது நெஞ்செரிச்சல் வந்து ஆட்டிப்ப்டைக்கிறது. இது நாம் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாததும், தண்ணீர் பருகாததும் முக்கிய காரணம். இதனை  குணப்படுத்த சில உதவிக்குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

​​சாதாரணமாக நெஞ்செரிச்சல் அடிக்கடி ஏற்படும்.  பொதுவாக காரமான உணவும் கூட இந்த நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகிறது. நெஞ்செரிச்சலை குணப்படுத்த சில வீட்டு வைத்தியம் இங்கே.

வாயு பானங்கள் மற்றும் காஃபின் போன்றவற்றை தவிர்க்கவும். அதற்கு பதிலாக மூலிகை தேநீரை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டருக்கு மேலாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

அன்றாட உணவில் வாழை, தர்பூசணி மற்றும் வெள்ளரிக்காய் சேர்க்கவும். தர்பூசணி சாறு அல்சரை குணப்படுத்துவதற்கு சிறந்தது. நீங்கள் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் நண்ணாரி பாணம் பருகுவது சிறந்தது.

தினமும் பால் ஒரு வேளையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவை சாப்பிட வேண்டும்.

சரியான இடைவேளையில் உணவருந்தவில்லையென்றாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஊறுகாய், காரமான சட்னி, வினிகர் முதலியவற்றை தவிர்க்கவும். தண்ணீரில் சில புதினா இலைகளை கொதிக்க வைத்து, சாப்பிட்ட பிறகு ஒரு தம்ளர் குடித்து வந்தாலும் இந்த நெஞ்செரிச்சல் சரியாகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.