குதிரையில் சென்று பரிட்சை எழுதிய மாணவி

அந்த காலத்தில் ராஜாக்கள், யானைகளில், குதிரைகளில் எங்கு சென்றாலும் செல்வார்கள். தற்காலத்தில் பீச்சில் மட்டுமே குதிரையை பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் குதிரை வண்டி இருந்தது. அதை மதிப்பிழக்க செய்ய ரிக்‌ஷா வந்தது, அதையும் மதிப்பிழக்க வைக்க ஆட்டோ வந்தது.

தற்போதைய காலத்தில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் மட்டுமே குதிரை வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

சில வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும் குதிரையில் மாப்பிள்ளை அழைப்பு ,பெண் அழைப்பு உள்ளிட்ட திருமண சடங்குகள் நடந்து வருகிறது.

மாணவ மாணவிகள் காலையில் எழுந்து அரசு பஸ் பாஸில் பள்ளிக்கு செல்ல பஸ் ஸ்டாப்பில் மணிகணக்கில் காத்திருந்து கூட்டமாக இருப்பதால் படியில் தொங்கி கொண்டு செல்கின்றனர் நம்மூர் மாணவ மாணவிகள்.

ஆனால் கேரளாவில் ஒரு மாணவி குதிரையில் பள்ளி செல்வதும். சமீபத்தில் அவர் பரிட்சை எழுத தடக் தடக் என குதிரையில் சென்றதும் வைரல் ஆகியுள்ளது.