பேய்ப்படங்களில் அதிகம் நடித்த நடிகர் இவர்தான் இது அவருக்கே தெரியாது

நிழல்கள் ரவியை தெரியாதவர்கள் இருக்க முடியாது சிறந்த குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர், ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹீரோ இவர்.தற்போது கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.

ஜீ தமிழ் டிவி தயாரித்த அமானுஷ்ய நிகழ்ச்சி சிலவற்றை நிழல்கள் ரவிதான் தொகுத்து வழங்கினார். அமானுஷ்யம், பேய், பிசாசு படங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கும் நிழல்கள் ரவிக்கும் நிறைய தொடர்பு உண்டு எப்படியான தொடர்பு என்று பார்த்தால். எண்பதுகளில் வந்த பேய்ப்படங்கள் பலவற்றில் நிழல்கள் ரவி ஒரு சிறிய வேடத்திலாவது நடித்திருப்பார்.

இது யதார்த்தமாக அமைந்ததா அல்லது சென் டிமெண்டாக அமைந்ததா என தெரியவில்லை ஆனால் எண்பதுகளில் வந்த அதிசய மனிதன்,ராசாத்தி வரும் நாள், மை டியர் லிசா, அந்தி வரும் நேரம், 13ம் நம்பர் வீடு என இன்னும் எண்ணற்ற படங்களில் நிழல்கள் ரவிதான் நடித்திருப்பார்.

குறிப்பிட்ட சில படங்களை தவிர எல்லா படத்திலும் ஹீரோவாக இல்லாவிட்டாலும் சிறு சிறு துண்டு துக்கடா வேடங்களிலாவது பேய்ப்படங்களிலாவது இவர் தலைகாட்டி இருப்பார். இவர் நடித்த பேய்ப்படங்கள் எல்லாம் ஹிட்டோ ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து படங்களையும் இங்கு குறிப்பிட முடியாது அவர் நடித்த பேய்ப்படங்களை நீங்களே ஒவ்வொன்றாக யோசித்து பாருங்கள் புரியும்.

அதிசய மனிதன் படத்தில் நாயகி கவுதமியை க்ளைமாக்ஸில் அமானுஷ்ய மனிதனிடம் இருந்து காப்பாற்றும் போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார்.

இது போல பல வித்தியாசமான வேடங்களை பேய்ப்படங்களில் நடித்திருந்தாலும் நாம் இது போல அதிகமான பேய்ப்படங்களில் நடித்திருக்கிறோம் என்பது அவருக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்.