ஹனிமூன் படத்தை வெளியிட்டு நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்பட்ட செளந்தர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளைய மகள் செளந்தர்யா. இவருக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. கடந்த் 11 ல் நடந்த திருமணத்துக்கு பல முக்கிய விஐபிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சென்றிருக்கும் இந்த தம்பதியினர் அங்கு எடுத்துக்கொண்ட இயற்கை எழில் சூழ் படங்களை வெளியிட்டிருக்கின்றனர். செளந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த பல நெட்டிசன்கள், கோபத்தின் உச்சிக்கு சென்றனர். 44 வீரர்கள் இறந்திருக்கும் இந்த சோக நேரத்தில் இது போல மகிழ்ச்சி புகைப்படங்களை வெளியிடலாமா என ஒருவர் மாற்றி ஒருவர் அவரை வறுத்தெடுத்திருக்கின்றனர்.

ஒரு சிலர் வாழ்த்தும் தெரிவித்திருக்கின்றனர்.