Connect with us

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் ஹாலிவுட் கலைஞர்

பொழுதுபோக்கு

அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் ஹாலிவுட் கலைஞர்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இடைவேளைக்கு முந்தைய சண்டைக்காட்சிக்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் இயக்குனர் வரவழைத்திருப்பதாக படக்குழுவினர்கள் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. பாட்ஷா படத்திற்கு இணையாக இடைவேளைக்கு முன்பு இந்த படத்தில் ஒரு அதிரடி சண்டைக்காட்சி இருப்பதாகவும், இந்த ஸ்டண்ட் காட்சி படத்தின் ஹைலைட் என்பதால் ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் வரவழைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top