தந்தை இறந்தாலும் நாட்டுக்காக ஹாக்கி விளையாடிய வீராங்கனை

இந்தியாவில் மிஸோராம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹாக்கி வீராங்கனை 19 வயது வீராங்கனையான லால்ரெம்ஸியாமி .இவர் ஜப்பானில் நடந்த எஃப் ஐ ஹெச் மகளிர் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற நேரத்தில் இவரது தந்தை

 லால்தன்சங்கா என்பவர் இவர் ஜப்பான் சென்ற நேரத்தில் கடந்த வெள்ளியன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

மறுநாள் இந்தியா-சிலி அணிகளுக்கிடையேயான அரையிறுதிப்போட்டி நடக்க இருந்த நிலையில் அதில் வென்றால்தான் இந்திய அணி டோக்யோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய அணி வீராங்கனை லால்ரெம்ஸியாமி, தன் தந்தையின் மரணம் அறிந்து அதிர்ச்சியடைந்தார் இக்கட்டான சூழலில் என்ன செய்வதென்று தெரியாமல் நாட்டுக்காக விளையாட முடிவெடுத்தார்

தாய் நாட்டின் வெற்றியை மனதில் கொண்டு இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாது என கனத்த மனதோடு முடிவெடுத்தார். இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தினார் நேற்று மிஸோரமில் உள்ள தனது கிராமத்துக்கு சென்றதும் தாயை கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதார்.