வெற்றி இயக்குனராக இருந்தும் மூன்று படங்கள் ட்ராப் ஆன ஆர்.வி உதயக்குமார்

ஒரு காலத்தில் புகழ்பெற்ற இயக்குனராக இருந்தவர் ஆர்.வி உதயக்குமார். உரிமை கீதம் என்றொரு வித்தியாசமான கதையம்சத்துடன் முதல் படத்தை இயக்கியவர் கார்த்திக் நடித்த பொன்னுமணி மூலம் அனைவருக்கும் தெரிந்த இயக்குனரானார். அதற்கு முன்பே சத்யராஜை வைத்து புதிய வானம் படத்தை இயக்கியுள்ளார்.

bdd5ae7723ca226c178fd68f64262d1a

குறுகிய காலத்தில் சிவாஜி, பிரபு, சத்யராஜ்,விஜயகாந்த் ரஜினி, கமல், அந்நாளைய முன்னணி ஹீரோக்கள் அனைவரும் இவர் படத்தில் நடித்தனர்.

உரிமை கீதம், புதிய வானம்,உறுதிமொழி, பொன்னுமணி, சின்னக்கவுண்டர், சிங்காரவேலன் என எல்லாமே குறுகிய வருடத்துக்குள் அந்நாளைய முன்னணி ஹீரோக்களை வைத்து செய்த படமாகும்.

இவர் எஜமான் படத்துக்கு முன்பு ரஜினியை வைத்து ஜில்லா கலெக்டர் என்ற படம் இயக்குவதாய் இருந்தது. அந்த படம் சில காரணங்களால் ட்ராப் ஆக அதற்கு பதிலாக எஜமான் படம் இயக்கப்பட்டது. அதே போல் உலகை விலை பேசவா என்ற கார்த்திக் படமும், சின்னராமசாமி, பெரிய ராமசாமி என்ற இந்த மூன்று படங்களும் இவர் ஆரம்பித்து பாதியில் நின்று போன படங்கள் ஆகும்.

நட்சத்திர நடிகர்களை அதிகம் இயக்கியதும் இவராகத்தான் இருக்கும். அதிகம் ட்ராப் ஆன படங்களும் இவரின் படங்களாகத்தான் இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.