Connect with us

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு

செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 13,586 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,80,532 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்தியாவில் கோரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,66,94 இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 336 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,573ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 2,04,711 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், தொற்று பாதிப்பால் 1,63,248 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மிக அதிகமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 116752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 59166 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் 50193 பேர்களும், டெல்லியில் 47102 பேர்களும், குஜராத்தில் 25093 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue Reading
To Top