கல்வான் பகுதியில் கனமழை: வேறு வழியில்லாமல் படைகளை பின்வாங்கிய சீனா

இந்தியாவின் எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள இடங்களை தனது சொந்த இடம் என்று உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு எதிராக இயற்கையே சதி செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கல்வான் பகுதியில் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன் படைகளை குவித்து வைத்த நிலையில் அந்தப் பகுதிகள் தற்போது கனமழை பெய்து வருகிறது

இதனை அடுத்து கல்வான் நதியில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வெள்ளம் காரணமாக கால்வாய் பகுதியில் படைகளை குவித்து வைத்திருந்த சீனா வேறு வழியில்லாமல் படைகளை வாபஸ் வாங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

சீனா படைகளை குவித்து வைத்திருந்த இடத்தில் தான் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சீன ராணுவம் படைகளை தற்போதைக்கு வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்தியாவுக்கு எதிராக சீனா தனது படைகளை குவித்த நிலையில் இயற்கையை கனமழை பெய்து சீன படைகளைப் பின்வாங்கச் செய்துவிட்டதாக இந்தியா தரப்பில் இருந்து கருதப்படுகிறது