பலத்த பாதுகாப்புடன் கமல்

நேற்று முன் தினம் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடக்கும் இடைத்தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அரவக்குறிச்சியில் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்லாமிய மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர் பேசியபோது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று கோட்சேவை குறிப்பிட்டு பேசினார்.

இது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹெச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனின் இந்த பேச்சை கண்டித்தனர்.

சமூக வலைதளங்களில் கமல்ஹாசனின் பேச்சை ஹிந்து இயக்கங்கள் கடுமையான வார்த்தை பிரயோகங்களை கொண்டு விமர்சித்து வருகின்றன. உச்சகட்டமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தவறாக பேசும் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என பேசியது மற்றொரு பக்கம் சர்ச்சையானது.

இப்படி பல்வேறு சர்ச்சைகளால் கமல் நேற்றைய பிரச்சாரத்தை ரத்து செய்தார்.

கமலின் ஆழ்வார்பேட்டை வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.