Connect with us

மார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை

செய்திகள்

மார்ச் 24ஆம் தேதி சென்னைக்கு வந்தவர்களுக்கு புதிய எச்சரிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணியில் மிகவும் தீவிரமாக சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி இண்டிகோ மற்றும் ஏர் ஆசியா விமானத்தில் டெல்லியில் இருந்து சென்னை வந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இண்டிகோ வாகனங்களில் வந்த சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்த விமானங்களில் பயணம் செய்தவர்கள் தங்களை தாங்களே 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஏதேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது

இதனை கணக்கில் கொண்டு மார்ச் 24ஆம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top