Connect with us

இவர்தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்..!!

பொழுதுபோக்கு

இவர்தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்..!!

பிக் பாஸ் சீசன் 3 இன்றுடன் மூன்றாவது வாரத்தை முடித்து 4 வது வாரத்திற்குள் அடியெடுத்து வருகிறது.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார். 

சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். 

இவர்தான் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும்..!!


அப்போது வனிதாவின் அணுகுமுறை சரியில்லை என்று கேள்வி கேட்டதுடன், அவருக்கு எதிராக சண்டையிட்ட தர்ஷனுக்கு ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், மற்ற யாரும் வனிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில்லை, இப்படி செய்வது தவறு ஒருவர் தவறு செய்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்று வனிதாவிற்கு எதிராக ஆதரவு தெரிவித்தார்.

பிக் பாஸ் தொடங்கியதிலிருந்து மீராவில் தொடங்கி, மதுமிதா, சேரன், அபிராமி, ஃபாத்திமா பாபு, தர்ஷன் என அனைவரிடமும் சண்டையிட்டு கார்னர் செய்யும் வனிதா வீட்டை விட்டு வெளியேறுவாரா என்று ரசிகர்கள் மட்டுமன்றி சக போட்டியாளர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் தெளிவாகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top