களைகட்டும் கமல் பிறந்த நாள் விழா

இன்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் ஆகும். இந்த பிறந்த நாளை பலரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

முக்கியமாக அவரின் ரசிகர்கள், தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்கள் அனைத்திலும் கமலே நீக்கமற நிறைந்துள்ளார்.

#HBDKamalHaasan என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் முன்னணியில் உள்ளது. கமல் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என தென்னக மொழிகள் அனைத்திலும் பரிட்சயமானவர்.

பல்வேறு விருதுகளை அவருக்கே திகட்டுமளவுக்கு கமல் பெற்றுள்ளார். எப்படிப்பட்ட அசாத்திய வேடங்களையும் ஏற்று நடித்தவர் கமல், கோவணத்தோடு நடித்தது, குள்ளமாக நடித்தது, வயதான பழுத்த கிழவன் தோற்றத்தில் நடித்தது, பெண்ணாக நடித்தது , ஒத்த படத்தில் பத்து வேடங்களில் நடித்தது என கமலின் சாதனைகளுக்கு அளவில்லை.

குறுகிய காலத்தில் 100 படங்களை எட்டிய சாதனை கமலைத்தான் சாரும் எண்பதிலேயே 100வது படத்தில் நடித்து விட்டார் அவரின் சாதனையை சொல்ல வார்த்தையில்லை

அவரின் பிறந்த நாளுக்கு நம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்கள்.