ஹன்சிகா நடிக்கும் பாட்னர்

நடிகை ஹன்சிகாவுக்கு தமிழில் அதிகமாக படங்கள் இல்லை. ஒரு காலத்தில் அதிகமான படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த நடிகை ஹன்சிகா. ஒரு கட்டத்தில் வாய்ப்புகளை இழந்து அவ்வப்போது கதாநாயகி வேஷம் கட்டி வருகிறார்.

சில நாட்களுக்கு முன் அவர் நடித்த துப்பாக்கி முனை படமே அவர் நடித்த கடைசி படமாக தமிழில் வந்தது.

இந்த நிலையில் ஆதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார்.

புதியவர் மனோஜ் தாமோதரன் இயக்கும் படம் பாட்னர். இதில் ஆதி, ஹன்சிகா, பல்லக் லால்வானி, யோகி பாபு உள்பட பலர் நடிக்கின்றனர். இதில் ஆதிக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். ஹன்சிகாவுக்கு முக்கிய வேடம் தரப்பட்டுள்ளது. படம் பற்றி மனோஜ் தாமோதரன் கூறும்போது, ‘இது காமெடி கதை படம். அதே சமயம், படத்தில் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சம்பந்தமான முக்கிய அம்சம் ஒன்று இடம்பெறும். அது ரசிகர்களை அதிகம் கவரும்படி ஜனரஞ்சகமாக இருக்கும்’ என்றார்.