Connect with us

பாதியில் நின்ற அரைஇறுதி ஆட்டம் இன்று தொடரும்…!!!

விளையாட்டு

பாதியில் நின்ற அரைஇறுதி ஆட்டம் இன்று தொடரும்…!!!

மான்செஸ்டர்:

இங்கிலாந்தில் நடந்து வரும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இதில் மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

அணியில் மாற்றம்:

இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவுக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்பட்டார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்து அணியில் டிம் சவுதிக்கு பதிலாக லோக்கி பெர்குசன் இடம் பிடித்தார்.

டி.ஆர்.எஸ் வாய்ப்பு நழுவியது:

‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்தது. நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ட்டின் கப்திலும், ஹென்றி நிகோல்சும் களம் இறங்கினர்.

பாதியில் நின்ற அரைஇறுதி ஆட்டம் இன்று தொடரும்…!!!

முதல் பந்திலேயே கப்திலுக்கு எல்.பி.டபிள்யூ. கேட்டு இந்திய வீரர்கள் முறையிட்டனர். டி.வி. ரீப்ளேயில் பந்து லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் செல்வது தெரிந்தது. இதனால் இந்தியாவின் டி.ஆர்.எஸ். வாய்ப்பு வீணானது.

சொதப்பலான ஆட்டம்:

3-வது ஓவரில் கப்தில் கோலியிடம் கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் கேன் வில்லியம்சன், நிகோல்சுடன் ஜோடி சேர்ந்தார்.ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் நிகோல்ஸ் 28 ரன்களில் கிளன் போல்டு ஆனார்.

இதைத் தொடர்ந்து வில்லியம்சனும், டெய்லரும் இணைந்தனர். வில்லியம்சன் 36 ரன்னில் ரன் அவுட் கண்டத்தில் இருந்து தப்பினார். டெய்லர் 22 ரன்னில், டோனியிடம் கேட்ச் ஆனார்.

வில்லியம்சன் 67 ரன்களில் சாஹலின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஜேம்ஸ் நீஷம் 12 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மழை செய்த சோதனை:

நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. சில மணி நேரங்கள் காத்திருந்த போதிலும் மழை நின்றபாடில்லை. அதனால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தொடர்ந்து நடக்கும்

மழையால் பாதிக்கப்பட்ட இந்த அரை இறுதி ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இன்றைய நாளில் நியூசிலாந்து அணி அதே நிலையில் இருந்து (211-5 ரன்) எஞ்சிய 23 பந்துகள் பேட்டிங் செய்யும். அதன் பிறகு இந்திய அணி ஆடும்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top