ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு யூனிபார்ம்: பள்ளி சுற்றறிக்கையால் பரபரப்பு

கொரோனா வைரஸ் தாகக்ம் காரணமாக கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில், பள்ளிகள் எப்போதும் திறக்கப்படும் என்று தெரியாமல் உள்ளது. இந்த நிலையில் ஒரு சில பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டமிட்டன. ஆனால் இந்த ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கண்டிப்பாக யூனிபார்ம் அணிய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிட்டதால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து தகவல் அறிந்த குஜராத் மாநில கல்வி அலுவலக அதிகாரிகள், உடனடியாக இந்த உத்தரவை திரும்ப பெறுமாறு உத்தரவிட்டதை அடுத்து இந்த உத்தரவை அந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டது

இதுகுறித்து அந்த பள்ளியின் நிர்வாகம் அரசுக்கு விளக்கமளித்தபோது, ‘பள்ளியில் மாணவர்கள் இருப்பது போன்ற ஒரு உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறியது. ஆனால் அரசு இந்த விளக்கத்தை ஏற்று கொள்ளவில்லை.