கிராமி விருதில் ஏ.ஆர் ரஹ்மான்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கிராமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஏ.ஆர் ரஹ்மான் கடந்த 2009ல் ஆஸ்கார் வாங்கிய நேரத்தில் தொடர்ந்து 2010ம் ஆண்டும் கிராமி விருதுகளையும் பெற்றார்.

இசைக் கலைஞர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் உயரிய விருதுகளில் ஒன்றான கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலசில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமது மகள் ரஹீமாவுடன் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் 86 வயதில் 28-வது கிராமி விருது பெற்ற குவின்சி ஜோன்சையும் ரஹ்மான் பாராட்டினார்.