வரவேற்பு பெற்ற என் ஜி கே தண்டல்காரன் பாடல்

தமிழில் அருமையான பல படங்களை கொடுத்தவர் செல்வராகவன். ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட சில படங்களில் சோழர் கால கதையை வித்தியாசமாக கொடுத்தவர். முதல் படம் காதல் கொண்டேனில் இருந்து 7ஜி ரெயின்போ காலனி வரை அனைத்தும் அழகான இயல்பான படங்களே.

புதுப்பேட்டை படம் இவரது படங்களில் மாறுபட்டு கொஞ்சம் அரசியல் கலந்து வந்தது. பெரும்பாலும் இவர் படங்கள் பேசப்படும் அளவு பெரும் வெற்றியை பெறுவதில்லை.

செல்வராகவன் சூர்யாவை வைத்து என் ஜி கே படத்தை இயக்கி வருகிறார். சில பல காரணங்களால் இப்படம் வருவதற்கு நீண்ட தாமதம் நிலவுகிறது.

யுவன் இசையமைக்கிறார். அவர் இசையமைத்துள்ள சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இன்று வெளியாகிய தண்டால்காரன் பாடலை கபிலன் எழுதியுள்ளார். ரஞ்சித் பாடியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் .

பாடல் செல்வா மற்றும் யுவன் ரசிகர்கள் மட்டும் இன்றி அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது.