கோதுமை தோசையை மொறுமொறுப்பாகவும் செய்யலாம்..


கோதுமை-2 கோப்பை
அரிசி மாவு 1/2 கோப்பை ரவை – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு-1/2 தே.க
நீர்த்த மோர் -1 டம்ளர்
செய்முறை:
கோதுமை மாவு, அரிசி மாவினை உப்பு சேர்த்து கிளறி, நீர் மோர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் கூடுதலா தண்ணி சேர்த்துக்கலாம். தோசை மாவு சற்று நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.
தோசைக்கல் நன்கு காய்ந்த பிறகு ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி, இருபுறமும் வேகவிடவும்.கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும், கவனமாக வார்க்கவும்.

கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள புதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் நல்ல சுவைதரும். மாவுடன் மிளகு, பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மி சேர்த்தும் தோசை வார்க்கலாம்..

#முழு கோதுமையை ஊற வைத்து, ஆட்டி புளிக்க வைத்து தோசை வார்த்தால் ருசியும் அபாரம், உடலுக்கும் நல்லது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews