Connect with us

42வது ஒருநாள் போட்டியில் சதத்தை பதிவு செய்த கோலி!!

விளையாட்டு

42வது ஒருநாள் போட்டியில் சதத்தை பதிவு செய்த கோலி!!

இந்தியா வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. உலகக் கோப்பையின் தோல்வியை சமாளித்து வெற்றி வாகை சூட வேண்டும் என்ற நோக்கில், இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றியே பெற்றுள்ளது.

இந்தியா  – வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் நேற்று நடைபெற்றது. இதில் வழக்கம்போல் அதிரடியாக ஆடி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் டாஸ் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

42வது ஒருநாள் போட்டியில் சதத்தை பதிவு செய்த கோலி!!

துவக்கம் எதிர்பார்த்த அளவு இல்லை ரசிகர்கள் மோசமான துவக்கத்தால் ஏமாந்து போயினர், அதிர்ச்சியளிக்கும் வகையில் ஷிகார் தவான் 3 ரன்னிலேயே வெளியேறினார், நம்பிக்கை நட்சத்திரமும் அதிரடி நாயகனுமான ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி நம்பிக்கையான ரிஷாப் பாண்ட் 35 ரன்களில் வெளியேறினார்.

ஷிகார் தவான், ரோகித் சர்மா, ரிஷாப் பாண்ட் ஆகியோரது ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை நழுவ விடும் அளவிலேயே இருந்தது.

அடுத்து வெற்றியை நோக்கி கோலி – ஸ்ரேயாஸ் இணையாக களமிறங்கினர் ஸ்ரேயாஸ் ஐயர். இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இந்த ஜோடியின் ஆட்டத்தால் 125 ரன்கள் சேர்த்தது.

விராட் கோலி சிறப்பாக ஆடி சதம் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இது அவரது 42வது ஒருநாள் போட்டி சதம் ஆகும். 125 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் அரைசதம் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடி 68 பந்துகளில் 71 ரன்கள் பெற்றார்.

அதன்பின்னர் கேதர் ஜாதவ் 14 ரன்களிலும், புவனேஷ்வர் குமார் 2 ரன்னும் ரன்களிலும் வெளியேறினர்.

பின்னர்  ரவீந்திர ஜடேஜா 16 ரன்களிலும், முகமது ஷமி 5 ரன்களிலும் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 279 ரன்கள் எடுத்தது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top