Connect with us

பள்ளிபாளையம்- விசாரணை செய்த பெண் ஏட்டை குடும்பத்தோடு சேர்ந்து கடித்த மாணவி

பொழுதுபோக்கு

பள்ளிபாளையம்- விசாரணை செய்த பெண் ஏட்டை குடும்பத்தோடு சேர்ந்து கடித்த மாணவி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையத்தை அடுத்த ஆவாரங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார் இவரது மனைவி ஜெகதாம்பாள். இவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராம் இவர். அங்குள்ள பொது கழிப்பறை ஒன்றில் கட்டணம் வசூலிக்கும் வேலையை செய்து வருகிறார் இவரது மனைவி புவனேஷ்வரி.

இவர்களது மகள் வாசுகி இவர் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக்., படித்து வருகிறார். விடுமுறையில் வீட்டில் இருந்தார்

நேற்று காலை வீட்டு முன்பு விறகு போடுவதில், பக்கத்து வீட்டின் ஆறுமுகம் மற்றும் ராம் குடும்பத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆறுமுகத்தின் மனைவி ஜெகதாம்பாளை, ராம் சரமாரியாக தாக்கினார். இதுகுறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின்பேரில், பள்ளிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஸ்டேசனுக்கு கூப்பிட்டு விசாரணை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராம் குடும்பத்தினரில் அவரது மகள் வாசுகி விசாரணையை வீடியோ எடுக்க முற்பட்டார். அதை போலீஸ் பெண் ஏட்டு சாந்தகுமாரி தடுத்தார்.

அவரது செல்போனை பறிக்க முயன்றார். அப்போது வாசுகியின் தாய் புவனேஷ்வரி, ஏட்டு சாந்தகுமாரியை கீழே தள்ளினார். மேலும், செல்போனை விட மறுத்த வாசுகி, சாந்தகுமாரியின் வலது கையை கடித்து குதறினார். 

இதைக்கண்ட போலீசார் காயமடைந்த ஏட்டு சாந்தகுமாரியை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஏட்டு சாந்தகுமாரி தன்னை தாக்கியதாகக் கூறி, மாணவி வாசுகியும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதுகுறித்து, ஏட்டு சாந்தகுமாரி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, வாசுகியின் தாய் புவனேஷ்வரியை கைது செய்தனர். இதேபோல், வீட்டின் முன்பு விறகுக் கட்டைகளை போட்ட தகராறு தொடர்பாக, ஜெகதாம்பாள் கொடுத்த புகாரின்பேரில், புவனேஷ்வரியின் கணவர் ராமும் கைது செய்யப்பட்டார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top