காயத்ரி ரகுராம் அரசியலில் இருந்து விலகல்- ரசிகர் ஒருவரின் கிண்டல் கேள்வி

காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா உறுப்பினராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். பாரதிய ஜனதா தலைவர் தமிழிசைக்கும் இவருக்கும் பல விசயங்களில் சர்ச்சை ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் கடந்த வாரம் பாரதிய ஜனதாவில் இருந்தும் அரசியலில் இருந்தும் காயத்ரி ரகுராம் தற்காலிகமாக விலகி இருப்பதாக அறிவித்தார்.

அரசியல் பற்றிய விசயங்களை தற்காலிகாக தவிர்ப்பதாக சொன்னார்

நேற்று கரூர் அரவக்குறிச்சி தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து அவர் கோட்சே என பேசினார்.

இது பலரிடையே மனவருத்தமாக ஏறி கொந்தளிப்பான விசயமாகவும் மாறியது. பல அமைப்புகள் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

பலரும் கண்டித்தது போல் காயத்ரி ரகுராமும், கமல் பேசியது தவறு என பேசி இருந்தார் இது பற்றிய பத்திரிக்கை செய்திக்கு கமெண்ட் தெரிவித்த சமூக வலைதள வாசி ஒருவர் ஏம்மா நீங்கதான் அரசியலை விட்டு விலகிட்டதா அறிவிச்சிங்க அப்புறம் ஏன் அரசியல் பேசறிங்க என தெரிவித்துள்ளார்.