கவினுக்கு நிச்சயம் ரெட் கார்டு இருக்கு..

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற சீசன்களைவிட விறுவிறுப்பாக இருக்கக் காரணம் முந்தைய சீசனைவிட அவலங்கள் அதிகம் நடப்பதுதான். கமல்ஹாசன் நேற்று சேரனிடமிருந்து விலகியது ஏன் என்ற தோரணையில் கேள்வி கேட்க அப்போது லாஸ்லியா, சேரன் அப்பா தன்னை டாஸ்க்கில் குறை சொல்லி ஜெயிலுக்கு அனுப்ப நினைச்சார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று சொன்னார்.

நிகழ்ச்சி முடித்ததும் லாஸ்லியாவும் சேரனும் பேசினர். தன் குடும்பம், உறவுகள் என அனைவர் நினைப்பும் இல்லாமல் இருக்க காரணம் லோஸ்லியா தான் என்று கூறினார்.  ஒரு வழியாக இருவரும் சமாதானம் ஆகியதாகத் தெரிந்தது.

கவினுக்கு நிச்சயம் ரெட் கார்டு இருக்கு..

அதன்பின்னர் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டு இருந்த போது, நடந்த விஷயங்களைக் கூற, கவினுக்கு சேரனிடம் லாஸ்லியா பேசியது பிடிக்கவில்லை என்பதுபோல காட்டிக் கொண்டார்.

இதன் தொடர்ச்சியாக, கவின் அருகில் இருந்த லாஸ்லியாவிடம் சேரன் குட்நைட் சொல்ல, இதனால் மேலும் கடுப்பாகினார் கவின்.

சேரன் செய்வது ட்ராமா என்பதுபோலக் கூறினார். பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொருவராக டார்கெட் செய்து வெளியே அனுப்புவதை வேலையாகக் கொண்டிருக்கும் கவின் விரைவில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.