கமல்ஹாசனிடம் மாட்டிக் கொண்ட கவின்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.

டிஆர்பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின்னர் கவினும், சாண்டியும் பிரியாவிடைப் பாடலை நாமினேட் ஆனவர்களுக்காகப் பாடினர்.

காப்பாற்றப்பட்ட லோஸ்லியாவிற்காகவும், நாமினேஷனில் இருக்கும் அபிராமி மற்றும் சாக்‌ஷிக்காகவும் பாடினார்கள். 


அவர்கள் பாடும்போதே அவர்களுடைய ஆர்டரில் பாடுவதாகக் கூறி, ஷாக்சியைப் பற்றி முதலில் பாடினார்கள், அதன் பின்னர் அபிராமிக்கான பாடல் கடைசியாக லோஸ்லியாவிற்கான பாடல் பாடப்பட்டது.


ஏன் இந்த ஆர்டர் சாக்ஷிதான் வெளியே போவார் என்று தெரியுமா? என்று கேட்க, அனைத்தும் தாங்கள் ஊட்டிய அறிவு அமர்தம் ராஜகுரு என வசனம் பேசி சமாளிக்கின்றனர்.