Connect with us

சாக்ஷியின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட கவின்!!

பொழுதுபோக்கு

சாக்ஷியின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட கவின்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

அதன்பின்னர் கவினும், சாண்டியும் பிரியாவிடைப் பாடலை நாமினேட் ஆனவர்களுக்காகப் பாடினர்.

சாக்ஷியின் தந்தையிடம் மன்னிப்புக் கேட்ட கவின்!!

அவர்கள் பாடும்போதே அவர்களுடைய ஆர்டரில் பாடுவதாகக் கூறி, ஷாக்சியைப் பற்றி முதலில் பாடினார்கள், சாக்ஷி எலிமினேட் ஆனதை கார்டைக் காட்டி உறுதி செய்தார் கமல் ஹாசன்.

வெளியேறிய பின்னர் கவின் ஷாக்சியிடமும் அவர் தந்தையிடமும் மன்னிப்புக் கேட்டார். சாக்ஷியின் தந்தை பரவாயில்லை, கேம் தானே விளையாடினீர்கள் என்று பதில் சொல்ல பார்வையாளர்கள் கை தட்டி ஆமோதித்தனர்.

பின்னர் அவர் பற்றிய குறும்பட போடப்பட்டது, அதில் கவின் ஷாக்சி எந்த அளவு நெருக்கமாக இருந்தனர் என்பது பற்றி காண்பிக்கப்பட்டது. கவின் எவ்வாறு எல்லாம் சாக்ஷியை ஏமாற்றினார் என்பதும் அதில் தெளிவாகத் தெரிந்தது.

இந்தக் குறும்படத்தை கவினுக்கும் லோஸ்லியாவிற்கும் போட்டிருக்கலாம், அப்போதுதான் கவினின் செய்த வேலைகள் வெளியே வந்திருக்கும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்,

Continue Reading

அதிகம் படித்தவை

To Top