Connect with us

சிகரெட் கேட்டு தகராறு – காசியாபாத் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அட்டகாசம்

செய்திகள்

சிகரெட் கேட்டு தகராறு – காசியாபாத் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் அட்டகாசம்

தப்லிக் ஜமாத் இ என்ற அமைப்பு கடந்த மார்ச் மாதம் நடத்திய டெல்லி மாநாட்டில் உலக நாட்டு இஸ்லாமிய பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் இவர்களுக்கு கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களிலும் இந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்களில்கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அதிகம்.

இந்த நிலையில் டெல்லியில் இது போல மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் சிலர் காஸியாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிலர் அரை குறை ஆடையுடன் வார்டுக்குள் திரிவதாகவும் ஆபாசமான பாடல்களை தொடர்ந்து கேட்பதாகவும் அங்கு வேலைபார்க்கும் செவிலியர்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும்,சிகரெட் கேட்டு தொல்லை செய்வதாகவும் புகார் வந்தது.

இதனடிப்படையில் இவர்களை விசாரித்த போலீசார் 6 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து அவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top