4 வது அவதாரத்திலிருந்தே விநாயகர் சதுர்த்தி!!

விநாயகர் நடுத்தர மக்களுக்கான கடவுள், அவருக்கு மிகப் பெரிய அளவில் கோயில்கள் தேவை இல்லை, சிறப்பாக வேலை செய்யப்பட்ட கட்டிடங்கள் கூடத் தேவையில்லை. அரசமரத்தடியோ, குளக்கரையோ அல்லது தெருமுனை முச்சந்தியோ என அவர் அமர்ந்திருக்கும் இடங்களே மிக மிக எளிமையான இடங்கள் ஆகும்.

கணபதியின் வேறு பெயர்கள்:

முழுமுதற் கடவுள் – கடவுள் அனைத்திற்கும் கடவுள் ஆதலால் முழுமுதற் கடவுள் என்று பெயர் பெற்றார்.

f9b1aded992e86b690b8487dc6da4e94

 ஆனைமுகன் –  யானை முகத்தை கொண்டவர் என்பதால்  ஆனைமுகன் என்று பெயர் பெற்றார்.

கணபதி – பூதகணங்கள் அனைத்திற்கும் அதிபதி ஆதலால் கணபதி என்று பெயர் பெற்றார்.

கஜமுகன் – யானைமுகத்தை கொண்டவர் என்பதால் கஜமுகன் என்று பெயர் பெற்றார்.

விக்னேஸ்வரன் – பிரச்சினைகளைத் தீர்க்கும் கடவுள் என்பதால் விக்னேஸ்வரன்  என்று பெயர் பெற்றார்.

விநாயகரை பற்றி முழு வரலாற்றினைக் கொண்ட நூல் கணேச புராணம் ஆகும், இதில் இவருடைய அவதாரங்கள் பற்றி தெளிவாகக் கூறப்பட்டிருக்கும். இவர் மொத்தம் 4 அவதாரங்கள் எடுத்ததாக அந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கிருத யுகம்:

காஸ்யப முனிவருக்கும் அதீதீ தேவிக்கும் மகாகடர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக அவதரித்து அசுரர்களை அழித்து மக்களை காப்பாற்றினார்.

திரேதா யுகம்:

இரண்டாவது யுகத்தில் அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து மயூரேசர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக இருந்தார்.

துவாபர யுகம்:

பராசர மகரிஷி மற்றும் பராசர தேவி வத்ஸலா ஆகியோரின் அன்பு மகனாக கஜானனன் என்ற பெயரில் அவதரித்தார்.

கலி யுகம்:

4 வது யுகத்திலே சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் விநாயகர் என்ற பெயர் கொண்ட பிள்ளையாக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. கலி யுகத்தில் விநாயகர் பிறந்த தினத்தைத் தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.